×

ராசிபுரத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியா?: பாஜக சுவர் விளம்பரத்தால் அதிமுகவினர் கடும் அதிருப்தி..!!

நாமக்கல்: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தற்போது வரை முடிவாகாத நிலையில் ராசிபுரம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுவதாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த  பேச்சுவார்த்தையில் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால் பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் பல்வேறு இடங்களில் பாஜக-வினர் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை வேட்பாளர் என்று அறிவித்து சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர். இது அதிமுக-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மண்டலத்தில் அதிமுகவினருக்கு சாதகமாக அதுவும் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏக்களின் தொகுதிகளை பாரதிய ஜனதா கேட்பதாக அதிமுக-வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


Tags : Bajaka ,Rassibhu ,Lt. ,Murugan ,bajaka wall , Rasipuram, L. Murugan, Competition, Wall Advertising
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக...