×

நீட் 2021: காஷ்மீரில் இந்திய ராணுவம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் 'சூப்பர் 30'திட்டம் தொடக்கம்

ஸ்ரீநகர்: இந்திய ராணுவம் தனது சூப்பர் 30 திட்டத்தின் கீழ் காஷ்மீரில் ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க தனது புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் ஸ்ரீநகரின் அனைத்து பின்தங்கிய மாணவர்களுக்கும் நாட்டின் மருத்துவ நீட் தேர்வில் 2021 ஐ முறியடிக்க தேவையான பயிற்சி பெற உதவும்.

இந்த முறை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் கல்வி மேம்பாட்டு அமைப்பு இந்திய இராணுவத்தின் சூப்பர் 30 திட்டத்துடன் ஒத்துழைத்து, கற்பித்தல் பகுதியை அதன் ஆசிரியர்களுடன் எடுத்துக்கொள்கிறது, அதே நேரத்தில் இராணுவம் நிர்வாகம் மற்றும் தளவாடங்கள் பகுதியை மேற்பார்வை செய்கிறது. வகுப்புகள் ஏற்கனவே ஸ்ரீநகரின் ஹாஃப்ட் சினாரில் தொடங்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் தீவிரவாதம் பெரும் பிரச்சினையாக நீடித்து வருகிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு இழுக்க முயற்சி செய்து வருகிறது.

பாகிஸ்தானின் அத்துமீறல் தாக்குதல்களை தடுத்து வரும் ராணுவம், காஷ்மீர் இளைஞர்களை நல்வழிப்படுத்த பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் 40 என்ற திட்டம் அமலில் உள்ளது.

இதன்மூலம் காஷ்மீர் ஏழை மாணவ, மாணவிகள் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர ராணுவம் சார்பில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமானோர் பலன் அடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டில் ‘சூப்பர் 30 என்ற திட்டத்தை ராணுவம் தொடங்கியது. இதன்மூலம் காஷ்மீரின் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி விருப்பமுள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். அவர்களுக்கு எழுத்துதேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம் 19 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 33 பேர் மருத்துவப் படிப்புகளில் இணைந்துள்ளனர்.

Tags : Kashmir , NEET EXAMINATION, Indian Army, Super 30
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...