×

தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினரிடம் நாளை ஒரே நாளில் நேர்காணல்: தலைமை கழகம் சார்பில் திடீர் அறிவிப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் நாளை ஒரே நாளில் நேர்காணல் நடத்தி முடிக்கப்படும் என்று அதிமுக தலைமை நேற்று திடீரென அறிவித்துள்ளது. அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல். புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்பி விருப்ப மனு செலுத்திய அனைத்து அதிமுகவினரிடமும் நேர்காணல், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 4ம் தேதி (நாளை) கீழ்க்கண்டவாறு மாவட்ட வாரியாக நடைபெற உள்ளன.
காலை 9 மணி முதல்:
* கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி மாவட்டங்கள்
* தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு
* திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு
* திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு
* புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், நீலகிரி
* கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு
* சேலம் மாநகர், சேலம் புறநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு
பிற்பகல் 3 மணி முதல்:
* கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு
* வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை
* விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு
* திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு
* வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு)
* தென்சென்னை வடக்கு (கிழக்கு), தென்சென்னை வடக்கு (மேற்கு), தென்சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர் மாவட்டங்கள்
* புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் இந்த நேர்காணலில் தொகுதி பற்றிய நிலவரம், வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரம் அறிந்திட, விண்ணப்பித்துள்ளவர்கள் மட்டும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல் தலைமை கழகத்திற்கு வந்து, நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேர்காணல் ஒரு கண்துடைப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக சார்பில் போட்டியிட நேற்று வரை சுமார் 4 ஆயிரம் பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால், கூடுதலாக சுமார் 1000 பேர் மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி 5 ஆயிரம் பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இவர்கள் அனைவரையும் கட்சி தலைமை நாளை சென்னை வரவழைத்துள்ளது. அதன்படி 5 ஆயிரம் பேரிடமும் நாளை ஒரே நாளில் நேர் காணல் நடத்தப்படுவது முடியாத காரியம் ஆகும். ஏதோ விருப்ப மனு தாக்கல் செய்தவர்களை சென்னைக்கு கட்சி தலைமை சார்பில் அழைக்க வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காகவே அழைக்கப்பட்டுள்ளனர். எந்தெந்த தொகுதியில் யாரை நிறுத்த வேண்டும் என்பதை ஏற்கனவே கட்சி தலைமை முடிவு செய்து விட்டது. கண்துடைப்புக்காக நாளை, நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Tamil Nadu ,Vuvachcheri ,Kerala ,Assembly Election , Interview with AIADMK candidates contesting Tamil Nadu, Pondicherry and Kerala Assembly elections on the same day tomorrow: On behalf of the leadership corporation Sudden announcement
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...