கொரோனா பரவலை தடுக்க தேர்தல் கூட்டங்களை கண்காணிக்க குழு: சுகாதாரத்துறை வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சில வாரங்களாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா அறிகுறியுடன், காய்ச்சலால் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல், ஒருசில இடங்களில், டெங்கு காய்ச்சலின் தீவிரம் உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் நடத்தும் பொது கூட்டங்களினால், கொரோனா பரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுகூட்டங்களில், சமூக இடைவெளி, முகக்கவசம் போன்றவை முறையாக பின்பற்றாவிடில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  

இதனால் தமிழகத்திலும் பாதிப்பு அதிகரிக்கும் என, சுகாதாரத்துறை கணித்துள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:

தமிழகத்தில், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதில் பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். தற்போது பொதுக் கூட்டங்களிலும் இதே நிலை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தேர்தல் பிரசாரங்களை கண்காணிக்கும் வகையில், கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், அபராதம் மற்றும் சட்ட நடவடிக்யை தீவிரப்படுத்தவும் வலியுறுத்தி உள்ளோம். இதுகுறித்து, தேர்தல் கமிஷன், முறையான வழிகாட்டுகள் வழங்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories:

>