×

‘இங்கி.. பிங்கி.. பாங்கி...’ தொகுதியை தேடுகிறார் ‘டாடி புகழ்’ அமைச்சர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியில் கடந்த 2011,  2016ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பிரதமர் மோடியை ‘டாடி’ என வர்ணித்த ராஜேந்திர பாலாஜி வெற்றி பெற்றார். தொடர்ந்து இருமுறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் தற்போது எந்த தொகுதியில் போட்டியிடுவார் என அதிமுகவினர் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.  கடந்த சில மாதங்களாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில்தான் போட்டியிட போகிறார் என்ற தகவல் பரவியது. இதனை உண்மையாக்கும் வகையில் ராஜபாளையம் தொகுதியில் கோயில், கட்சி நிர்வாகிகளுக்கு பணத்தை அமைச்சர் வாரி இறைத்து வந்தார். அமைச்சர்கள் அந்தந்த தொகுதியிலேயே போட்டியிடும்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாகவும், இதனால் மீண்டும் சிவகாசியில்தான் ராஜேந்திர பாலாஜி போட்டியிட போகிறார் எனவும் தகவல்கள் பரவின. இதனாலும் கட்சியினர் குழப்பமடைந்தனர்.

இதனைக் கடந்து, அமைச்சர் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவார் என கடந்த 3 நாட்களாக தகவல்கள் பரவுகின்றன. விருதுநகர் தொகுதியில் சிவகாசி ஒன்றிய கிராம வாக்குகளைப் பெறலாம் என்ற நோக்கில் அமைச்சர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சாத்தூர் தொகுதியில்தான் அமைச்சர் போட்டியிட வேண்டும் என்று 20க்கும் அதிக அதிமுக நிர்வாகிகள் விருப்ப மனு செய்துள்ளனர். தேர்தல் அறிவிப்பு வெளியாகி மனுத்தாக்கல் செய்வதற்கான நாள் நெருங்கும் நிலையில், அங்கேயா? இங்கேயோ? என்று அமைச்சரும், அவரது தரப்பினரும் தவித்து வருவதும், மாவட்ட அதிமுகவினரும் குழப்பத்தில் இருப்பதும் தொடர்கிறது.

Tags : Ingie ,Doddi , ‘Ingi .. Pinki .. Bangi ...’ The minister of ‘Daddy fame’ is looking for the volume
× RELATED உலக கோப்பை முதல் அரையிறுதியில் இன்று இங்கி. - நியூசி. மோதல்