×

கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்க பரிசீலிப்பு: பாபா அணுமின் நிலையம் வெங்கடேசன் எம்.பிக்கு பதில்

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளுக்கான தேர்வு மையத்தினை தமிழகத்தில் அமைக்க பரசீலிப்பதாக, பாபா அணுமின் நிலையம் வெங்கடேசன் எம்பிக்கு பதில் அளித்துள்ளது. மதுரை எம்பி, வெங்கடேசனுக்கு, பாபா அணு மின் நிலையம் சார்பில் பதில் அளித்துள்ள அதன் கண்ட்ரோலர் கே.ஜெயக்குமார் தனது கடிதத்தில், ‘உதவித் தொகையுடனான பயில்நர் ( பிரிவு 1 & 2) க்கான தேர்வுகள் மூன்று கட்டங்களாக - துவக்க நிலைத் தேர்வு, முன்னேற்ற கட்ட தேர்வு, திறனறித் தேர்வு-  நடைபெற வேண்டியுள்ளதால் விண்ணப்ப நிலையில் இருந்து தேர்வுப் பட்டியல் வெளியிடும் வரையிலான பணி மும்பையைத் தலைமையகமாகக் கொண்டே நடத்தப்படுகிறது.

விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் ஏராளமாக வரப்பெறுகிறது. எழுத்துத் தேர்வை ஒன்றிற்கு மேற்பட்ட மையத்தில் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. என்றாலும் விண்ணப்பங்களைத் தொகுக்கும் பணி நிறைவடைந்தவுடன், விண்ணப்ப எண்ணிக்கையைக் கணக்கிற் கொண்டு, சென்னையில் ஓர் மையத்தை அமைக்க வாய்ப்புள்ளதா என்று பரிசீலிக்கப்படும்’ எனத்தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Kalpakkam ,Baba Atomic Power Station ,Venkatesh MP , Consideration to set up examination center in Tamil Nadu for Kalpakkam nuclear power plant works: Baba Atomic Power Station in reply to Venkatesh MP
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...