அனைவரையும் அடிபணிய வைக்கும் பாஜவால் சிலரை எதிர்க்க முடியவில்லை: துரைமுருகன் பேச்சு

சென்னை: லட்சிய தலைவரின் எழுச்சி நாள் என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் கொளத்தூர்  பெரவள்ளூர் சதுக்கம் அருகே நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ்குமார் ஏற்பாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொண்டனர்.  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது,  ‘‘மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் என்கிற நிலையில் இருந்து டெல்லியை அதிர வைத்திருக்கிறார். டெல்லி பயப்படுகிறது.

இல்லையெனில் அமித்ஷா, திமுகவை இந்த அளவிற்கு விமர்சித்து இருக்க மாட்டார். பாஜ நினைத்தால் நாடாளுமன்றத்தை கூட்டுகிறது. நாடாளுமன்றம் அவர்களுக்கு பொழுதுபோக்கு மன்றமாகிவிட்டது. அனைவரையும் அடிபணிய வைக்கும் பாஜவால் இந்தியாவில் சிலரை மட்டும் எதிர்க்க முடியவில்லை. அதில் முக்கியமானவர் மு.க.ஸ்டாலின்’’ என்றார். நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, ரவிச்சந்திரன், தாயகம் கவி, ரங்கநாதன், பகுதி செயலாளர்கள் ஐசிப் முரளி, நாகராஜன், வடசென்னை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷிப்பிங் டில்லி பாபு, அகரம் கோபி, அனந்தராமன், கொளத்தூர் கோபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: