×

தேர்தல் நடக்கும் அசாமில் 5 உத்தரவாத பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா

தேஜ்பூர்: பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட 5 உத்தரவாத பிரசாரத்தை பிரியங்கா காந்தி அசாமில் தொடங்கி வைத்தார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இம்மாதம் 27, ஏப்ரல் 1, 6ம் தேதிகளில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனால், இங்கு பிரசாரம் அனல் பறக்கிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாட்கள் பயணமாக இங்கு வந்தார்.

கடைசி நாளாக நேற்று தேஜ்பூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், `‘அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 நிதி உதவி, தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் தினக்கூலியை தற்போதைய ரூ.167ல் இருந்து ரூ.365 ஆக உயர்த்தி வழங்குதல், 25,000 இளைஞர்களுக்கு அரசு வேலை, ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படாது என்பன உள்ளிட்ட 5 உத்தரவாதங்களை காங்கிரஸ் கட்சி செயல்படுத்தும்,’’ என்றார்.

பின்னர், பிஸ்வநாத் பிரசாரத்தில் பேசிய அவர், `‘3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். தனது வீட்டில் இருந்து 4 கிமீ தூரத்தில் போராடும் அவர்களை பிரதமர் ஒருநாளும் சந்திக்கவில்லை. ஏனென்றால், இந்த ஆட்சி பணக்காரர்களுக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கு மட்டுமே ஆனது,’’ என்றார்.

Tags : Priyanka ,Assam , Priyanka launches 5 guaranteed campaign in Assam
× RELATED அசாமில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தலைவன் கைது: கூட்டாளியும் சிக்கினான்