கூட இருந்தே குழி பறிக்கிறாங்க சாமி! : குமுறும் சிட்டிங் எம்எல்ஏ

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பரபரப்பான சட்டசபை தொகுதிகளில் ஒன்று பர்கூர். இந்த தொகுதியில் வெற்றி பெற்று தான் முதன் முறையாக ஜெயலலிதா தமிழக முதல்வரானார். அதேபோல் இதே தொகுதியில் நின்று அவர் தோற்றதும் அரசியல் அரங்கை அதிரவைத்தது. அதேநேரத்தில் நடப்பு தேர்தலும் ரத்தத்தின் ரத்தங்களின் கோஷ்டி மோதலால் ரணகளமாக மாறியுள்ளது பர்கூர். தற்போது அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் இந்த தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் முன்னாள் துணை சபாநாயகரும், தற்போதைய மேல்சபை எம்பியுமான தம்பிதுரையின் தீவிர ஆதரவாளர் மட்டுமன்றி நெருங்கிய உறவினரும் ஆவார். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பர்கூரில் போட்டியிட சிட்டிங் எம்எல்ஏ.வான ராஜேந்திரன் விருப்ப மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மேல்சபை எம்பியுமான கே.பி.முனுசாமி கோஷ்டியினர் ராஜேந்திரனுடன் இருந்தவர்களை தூண்டிவிட்டு விருப்பமனு கொடுக்க வைத்துள்ளனர். முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எம்சி பெருமாள் ஆகியோரை இதற்காக களத்தில் இறக்கி உள்ளனர். சிட்டிங் எம்எல்ஏ தொகுதி பக்கமே வருவதில்லை. அதனால் உங்களுக்கு சீட் வாங்கி கொடுக்கிறேன் என்று நெருப்பு புகையை வீசியிருக்காராம் முனுசாமி. இதனால் ராஜேந்திரனின் விசுவாசிகளாக இருந்த இருவரும் தற்போதும் இடம் மாறி இருக்காங்களாம். என்ன பண்ணுவது? கூட இருந்ேத குழி பறிக்கிறாங்க சாமி என்று ஆதரவாளர்களிடம் குமுறிக்கிட்டே இருக்காராம் சிட்டிங் எம்எல்ஏ. ஆனாலும் அண்ணன் தம்பிதுரை கைகொடுப்பார் என்ற நம்பிக்கை மட்டும் அவர் மனசுல ஓடிக்கிட்டே இருக்குதாம்.

Related Stories:

>