×

கெஜ்ரிவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு குழந்தைகள் நல திட்டங்களுக்காக ரூ.185 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: குழந்தைகள் நல திட்டத்திற்காக ரூ.185 கோடி ஒதுக்க டெல்லி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், சிறுபான்மையினத்தவருக்கான உதவித்தொகை மற்றும் லாட்லி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுபற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: எஸ்சி, எஸ்டி, மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த 1-12 வகுப்பு மாணவர்களுக்கு மெட்ரிக் வகுப்பிற்கு முந்தைய, பிந்தைய மெட்ரிக் மற்றும் தகுதி உதவித்தொகை ஆகியவற்றிற்காக ரூ. 76 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேவேளையில், பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை ஊக்கப்படுத்தும் ‘லாட்லி திட்டத்திற்கு’ ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கியது.

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையால் கடந்த 2008 இல் செயல்படுத்தப்பட்ட ‘லாட்லி திட்டம்’, பெண் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல ஊக்குவிக்கவும்,பள்ளியை விட்டு பாதியிலிவேயே வெளியேறுவதை குறைப்பதற்கும் நிதிப் பாதுகாப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும். கல்வியின் செயல்முறை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, சிறப்புத் தேவைகள் மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான ‘திறமை ஊக்குவிப்புத் திட்டத்திற்கு’ரூ.2 கோடி தொகையை ஒதுக்கி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதுதவிர, ‘‘திறமை ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், கல்வி  இயக்குநரகத்தின் உள்ளடக்கிய கல்வி பிரிவுக்கு சலுவை வழங்கப்படும். இதன்மூலம் அரசு பள்ளிகள் உபகரணங்கள் மற்றும் உதவிகளைப் பெற முடியும். மேலும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் திறமைகளை வளர்த்தெடுக்க முடியும். டெல்லி அரசுப் பள்ளிகளில் நூலக புத்தகங்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் 4,178 எண்ணிக்கையில் இரும்பு அலமாரிகளை வாங்குவதற்காக அமைச்சரவை ரூ. 7.2 கோடியை கல்வி இயக்குநரகத்திற்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Kejriwal ,Cabinet , At a meeting chaired by Kejriwal, the Cabinet approved an allocation of Rs 185 crore for child welfare schemes
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...