துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

மங்களூரு: மங்களூருவில் இருந்து துபாய்க்கு கடத்த இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை மங்களூரு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரின் உள்ளாடையில் வெளிநாட்டு கரன்சி மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உத்தர கர்நாடக மாவட்டம், ஹொன்னவாராவை சேர்ந்த முஜாக்கீர் அகமது அமீடா என்பவர் துபாய்க்கு செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். அவர் மீது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரின் உள்ளாடையில் டாலர், குவைத், தினார் போன்ற வெளிநாட்டு கரன்சிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது இந்திய மதிப்பின் படி ரூ.5,52,678 ஆகும். கரன்சியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Related Stories:

>