×

டெல்லி வன்முறையில் பாஜக-வின் சதி உள்ளது: ஆம்ஆத்மி எம்பி பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறை சம்பவத்தில் பாஜகவின் சதி உள்ளதாக ஆம்ஆத்மி எம்பி குற்றம்சாட்டி உள்ளார்.  மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய்  சிங் கூறுகையில், ‘ஜனவரி 26ம் தேதி செங்கோட்டையில் நடந்த வன்முறை சம்பவத்தில் பாஜகவின் சதித்திட்டம் உள்ளது. சம்பவம் நடந்த நாளில் இருந்து, இதே கருத்தை தான் நான் கூறிவருகிறேன்.

 மத்திய அரசு கொண்டு வந்த மூன்று  விவசாய சட்டங்களும் விவசாயிகளுக்கு மரண தண்டனை அளிக்கக் கூடியவை. பாஜகவின் தலைவராக இருந்தவர் (நடிகர் தீப் சித்து) வேண்டுமென்றே செங்கோட்டையைத் தாக்கினார்.  டெல்லி காவல்துறை, மத்திய அரசின் உத்தரவின் பேரில், விவசாயிகளை செங்கோட்டைக்குள் செல்ல அனுமதித்தது. டெல்லி காவல்துறையின் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு போன்றவற்றால் கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள்  துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளை இழிவுபடுத்தியுள்ளது. இதற்கு முன்னர் எந்த மத்திய அரசு இதுபோன்று நடந்து கொண்டதில்லை’ என்றார்.

முன்னதாக மீசட்டில் நடந்த ‘கிசான் மகாபஞ்சாயத்து’ நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘இன்று நாட்டின் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். அவர்கள் டெல்லி எல்லையில் கடந்த 95 நாட்களாக  கடுமையான குளிரில் அமர்ந்துள்ளனர். 250க்கும் மேற்பட்ட விவசாய சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். வேளாண் சட்டங்கள் முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது. இந்த சட்டங்கள் விவசாயிகளின் நிலத்தை அபகரித்து முதலாளிகளுக்கு கொடுக்க  வழிவகை ெசய்யும். இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், விவசாயிகள் தங்கள் சொந்த வயல்களில் தொழிலாளர்களாக இருப்பார்கள்’ என்றார்.



Tags : Pajaga ,Delhi ,Amadami MB Bakir , BJP conspiracy in Delhi violence: Aam Aadmi Party MP Pakir accused
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்