×

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்.!!!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் இன்று மத்திய  அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப்  பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு  தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும்  பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு  நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதன்படி, நேற்று டெல்லி எய்ம்ஸ்  மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.  பிரதமர் மோடியை தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பீகார்  முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தடுப்பூசி  போட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் என பல முக்கிய தலைவர்கள்  கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர்.

* மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா  தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

* மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது மனைவியுடன் இணைந்து டெல்லி ஹார்ட் &  நுரையீரல் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

* மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில்  கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

* மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

* கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா கொரோனா தடுப்பூசி முதல் டோஸை சிவமோகாவிலுள்ள அரசு  ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.

* மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்  போட்டுக்கொண்டார்.

* தேசிய மாநாட்டு எம்.பி.பாரூக் அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர்  இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

* தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) எம்.பி., கே கேசவ ராவ் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

* கர்நாடக அமைச்சர் பி.சி. பாட்டீல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை ஹவேரியின் ஹிரேகேரில் உள்ள தனது இல்லத்தில் போட்டுக்கொண்டார்.


Tags : Corona , First dose of corona vaccine: Union and state ministers, political party leaders put today. !!!!
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...