×

அரவக்குறிச்சி அருகே ரங்கராஜ் நகரில் குழாய் உடைப்பால் 10 நாளாக வீணாகும் குடிநீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே பள்ளபட்டி ரங்கராஜ்நகரில் குழாய் உடைப்பால் 10 நாட்களாக குடிநீர் வீணாகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி ரங்கராஜ் நகரில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் 10 நாட்களக சாலையோரம் ஓடி  வீணாகின்றது. மரவாபாளயம் காவிரிஆற்றிலிருந்துத்திலிருந்த காவிரி கூட்டுக்குடிநீர் அரவக்குறிச்சி வழியாக பள்ளபட்டி பேருராட்சி மற்றும் அரவக்குறிச்சி  ஒன்றியத்திலுள்ள பல ஊராட்சிகளுக்கு பூமிக்கடியில் பெரிய பைப் மூலம் கொண்டு சென்று வினியோகிக்கப் படுகின்றது.

இந்நிலையில்  அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி ரங்கராஜ் நகரில் சாலையோரம் காவிரி குடிநீர் குழாய் உடைந்தது. இதிலிருந்து கடந்த 10 நாட்களாக ஏராளமாக  குடிநீர் வெளியேறி ரெங்கராஜ் நகர் தெரு மற்றும் அரவக்குறிச்சி சாலையில் சாலையோரம் ஓடி வீணாகின்றது.மேலும் இதனால்ஆங்காங்கே குளம் போல் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பரவும் அபாயம் உள்ளது. கோடை காலம் துவங்கி. கடும்  வெயிலடிக்கும் இந்த நேரத்தில் மாவட்டம் முழுவதும் வறட்சியான நிலையில், குடிநீர் பற்றாக் குறையான இந்த சமயத்தில் குடிநீர் இப்படி தெருவில்  ஓடி வீணாகும் அவலமான நிலை உள்ளது.

கடந்த 10 நாட்களாக இதுவரையிலும் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர். இதனால் மாவட்ட  நிர்வாகம் இதனை கவனித்து குடிதண்ணீர் வீணாகமல் தடுக்க உடனடியாக நவடிக்கை எடுக்க இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Rangaraj ,Arawukchi , Pipe rupture in Rangaraj near Aravakurichi Drinking water wasted for 10 days: demand for action
× RELATED முதியவர் தீக்குளித்து தற்கொலை