×

அமித்ஷா கையில் தலையாட்டி பொம்மை: ப.சிதம்பரம் கிண்டல் ட்வீட்

சென்னை: அமித்ஷாவுக்கு வானதி சீனிவாசன் கொடுத்த தலையாட்டி பொம்மைகள் குறித்து ப.சிதம்பரம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப் 6-ம் தேதி நடைபெற உள்ளது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு, போட்டியிடும் தொகுதிகள், பிரச்சாரப் பணிகள், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று முன் தினம் விழுப்புரத்தில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிவிட்டு சென்னை திரும்பி வரும்போது, மதுராந்தகத்தில் உள்ள சாலையோர உணவகத்தில் சாப்பிட்டார். அவருடன் கட்சி நிர்வாகிகளுடன் சாப்பிட்டனர். அப்போது, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், இரண்டு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை அமித்ஷாவுக்கு பரிசளித்தார். அமித்ஷாவுக்கு 2 தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை பரிசாக அளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

மேலும் இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அமித்ஷா கையில் தலையாட்டி பொம்மை குறித்து ப.சிதம்பரம் கிண்டல் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; இந்தப் பொம்மைகளின் பெயர்களைச் சரியாகச் சொல்பவர்களுக்கு பரிசு உண்டு என கூறினார்.


Tags : Amatsha , Amit Shah hand puppet: P. Chidambaram teasing tweet
× RELATED இவ்வளவு நாள் பட்டபாடு போதும்டா சாமி......