தொடரும் இழுபறி!: தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை..!!

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை தேமுதிக புறக்கணித்த நிலையில் இன்று மாலை அதிமுக - தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக-விற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் எட்டப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக கூட்டணி என்பது உறுதிசெய்யப்படாமல் இழுபறி நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில் இன்று மாலை மீண்டும் அதிமுக - தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஏற்கனவே அதிமுக தரப்பில் இருந்து தேமுதிகவினருடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளை தேமுதிக கேட்டு வரும் நிலையில் 10 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது. தேமுதிக எதிர்பார்க்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையை அதிமுக தரப்பில் இருந்து வழங்க இயலாது என்று தெரிவித்ததன் காரணத்தினால் நேற்றைய தினம் தேமுதிக-வின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்தி செயல்படப்போவதாக பதிவு ஒன்றினை அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் பதிவு செய்திருந்தார். இதனால் தேமுதிக தனித்து களம் காண்கின்றதா? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

இதுபோன்ற சூழலில் தேமுதிக-வை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைத்திருந்தது. இன்று மாலை அதிமுக - தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தை என்பது நடைபெறவிருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் அவை தலைவர் இளங்கோவன், பார்த்தசாரதி, மோகன்ராஜ் போன்ற நிர்வாகிகள் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பில் துணை ஒருங்கிணைப்பாளர்கள், அமைச்சர்கள் சிலர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோருடன் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: