×

ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் வாங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை: அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின் போது வாக்களிக்க வரும் ஒவ்வோரிடமும் வாக்குச்சாவடியில் நுழைவதற்கு முன்பாக ஓட்டிற்கு பணம் வாங்கவில்லை என சத்திய பிரமாணம் வாங்கிய பிறகு தான் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் சூரிய பகவான் தாஸ் என்பவர் மனு அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் தனது கோரிக்கையை பரிசீலிக்க ஆணையத்துக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கானது தலைமை நீதிபதியின் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்ததுடன் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. எனவே இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தையும், அரசையும் அணுகும்படி வழக்கை முழுமையாக முடித்து வைத்துள்ளனர்.

பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற சூழிநிலையில் மனுதாரர் கேட்கின்ற கோரிக்கை மீது எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வாக்களிக்க பணம் வாங்க கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் பிரச்சாரம் ஒவ்வொரு தேர்தலின் போது எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தியம் வாங்குவது என்பது சாத்தியம் இல்லாதது என்பதால் இது தொடர்பாக உத்தரவிட நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கையை முழுமையாக முடித்து வைத்திருக்கிறார்கள்.

Tags : Supreme Court , High Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...