×

27 மணி நேரம்..195 நாடு!: பென்சில் முனையில் உலக நாடுகளின் பெயர், தலைநகரங்களை செதுக்கி கல்லூரி மாணவி சாதனை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் 27 மணி நேரத்தில் 195 நாடுகளின் பெயர்களையும் அவற்றின் தலைநகரங்களின் பெயர்களையும் பென்சில்களில் மெல்லிய ஊசியால் செதுக்கி புதிய சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு தனி திறமை உண்டு. சிலர் அவற்றை கண்டறிந்தது வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த முயற்சிக்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாததாக அமைகிறது. பென்சில்களை கொண்டு அவரவர் தன் திறமைக்கேற்ப பல வித்யாசமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பென்சில் முனையில் பல பெயர்களை செதுக்கி சாதனை படைத்திருக்கிறார். பூந்தமல்லி அடுத்து வெள்ளவேடு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான சினேகா, பென்சிலில் சிறிய அளவில் சிற்பங்களை செதுக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடவுள் சிலைகள், வீடு, தொடர் சங்கிலி என பல்வேறு சிறிய அளவிலான உருவங்களை பென்சிலில் செதுக்கி உள்ளார்.

இந்நிலையில், தனது தனித்திறனில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் பென்சில்களில் மெல்லிய ஊசிகளை பயன்படுத்தி உலக நாடுகளின் பெயர்களை செதுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி 27 மணி நேரத்தில் 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்களை 195 பென்சில்களில் செதுக்கி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து மாணவிக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் விருது வழங்கி கவுரவித்துள்ளது.


Tags : Pencil, World Country Name, Capital, College Student Achievement
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...