திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு: ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற பாரதிய ஜனதா கட்சியின் கனவு பலிக்காது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார். மேற்குவங்க சட்டமன்றத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்த தேஜஸ்வி யாதவ் சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற பாரதிய ஜனதாவின் கனவு நிச்சயம் பலிக்காது என்றார்.

நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், செம்மொழிகளை காப்பாற்றவேண்டும் என்றால் அரசியலமைப்பு சாசனம், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் பாரதிய ஜனதா தோற்கடிக்கப்பட வேண்டும் என்று தேஜஸ்வி கூறினார். இதற்காகவே மேற்குவங்க மாநிலத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து செயல்பட இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார். மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் களத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி, காங்கிரஸ் இணைந்த மகா கூட்டணி என மும்முனை போட்டி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: