ஜோ பைடனின் 100 நாள் செயல் திட்டத்திற்கு பலன்!: அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்று குறைந்து வருவதாக புள்ளி விவரம் தகவல்..!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் தீவிரத்தால் தினசரி கொரோனா தொற்று குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7 நாட்களாக தொற்றின் விழுக்காடு குறைந்து வருவதை புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. கலிஃபோர்னியாவில் தினசரி தொற்று ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மக்களுக்கு சாதகமான செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது என்று முடிவு செய்த மக்களும், மருத்துவ துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தினமும் 60,000க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி தொற்று 50,342 ஆக குறைந்திருக்கிறது. இதனை அடுத்து வரும் நாட்களில் தொற்றின் சதவீதம் மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 2 கோடியே 93 லட்சத்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பிடித்துள்ள கொரோனா கொல்லுயிரி 5 லட்சத்து 27 ஆயிரத்து 171 உயிர்களை பறித்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தான் ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் செயல் திட்டத்தை செயல்படுத்தி கொரோனாவின் தாக்கத்தை கணிசமாக குறைப்பேன் என்று ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

Related Stories:

>