×

தொடர்ந்து 5வது மாதமாக 1 லட்சம் கோடியை தாண்டியது ஜிஎஸ்டி வசூல்

புதுடெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி 1.1 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன்,  தொடர்ந்து 5வது முறையாக, மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி 1,13,143 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி 21,092, மாநில ஜிஎஸ்டி  27,273 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 55,253 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் இறக்குமதி பொருட்கள் மீதான வரி 24,382 கோடி  அடங்கும். இதுபோல் செஸ் வரியாக 9,525 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் இறக்குமதி பொருட்கள் மீதான வரி 660 கோடி என்பது  குறிப்பிடத்தக்கது.

பொருளாதார சரிவில் இருந்து மீள்வதை குறிக்கும் வகையில் தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டி உயர்ந்து  வருகிறது. அதோடு, கடந்த மாத ஜிஎஸ்டி வசூல், முந்தைய ஆண்டு பிப்ரவரியில் வசூலானதை விட 7 சதவீதம் அதிகம். இதுபோல் இறக்குமதி  சேவைகளையும் சேர்த்து, இறக்குமதி பொருட்கள் மூலம் கிடைத்த வரி வருவாய் 15 சதவீதமும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் வசூலான வரி  வருவாய் 5 சதவீதமும் அதிகம் என நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 1 லட்சம் கோடிக்கு மேல் மாதாந்திர  வசூல் உயர்ந்திருந்தாலும், முந்தைய மாதத்தில் வசூலான 1,19,875 கோடியை விட குறைவு.

Tags : GST
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...