மான்ட்பெல்லியர் ஓபன் டென்னிஸ்: டேவிட் காபின் சாம்பியன்

பாரிஸ்: பிரான்சில் நடைபெற்ற மான்ட்பெல்லியர் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், பெல்ஜியம் வீரர் டேவிட் காபின்  சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப் போட்டியில் ராபர்டோ பாடிஸ்டா அகுத்துடன் (ஸ்பெயின்) மோதிய காபின் 5-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 5 நிமிடம் போராடி  வென்றார். இது அவரது 5வது ஏடிபி சாம்பியன் பட்டமாகும். பாடிஸ்டா அகுத்துக்கு எதிராக தொடர்ந்து 4வது வெற்றியைப் பதிவு செய்த்துள்ள அவர் 4 -2 என முன்னிலை வகிக்கிறார்.

Related Stories:

>