குப்பை கொட்டுபவர்களை தடுக்க புதிய நடவடிக்கை: கார்வார் நகராட்சி அதிரடி

கார்வார்: கடலோர கர்நாடகாவில் பாம்புகள் இருப்பதை குறிக்கும் அடையாள பலகைகள் வைப்பது ஒரு பொதுவான நடைமுறையாகும். தனியாருக்குச் சொந்தமான இடங்களில் மக்கள் அத்துமீறலைத் தடுக்கவும், திருட்டை சரிப்பார்க்கவும் இது பயன்படுகிறது. நகரத்தை சுத்தமாகவும், நேர்த்தியாகவும், வைத்திருக்க கார்வார் சிஎம்சி பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது. ஆனாலும் சிலர் தொடர்ந்து அந்த இடத்தை குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் ஊழியர்கள் தங்களின் கடின உழைப்பால் நகரை சுத்தப்படுத்தி வருகின்றனர்.  தொடர்ந்து கார்வார் கடற்கரை அசுத்தமாகவும், மது பாட்டில்கள் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்தும் காணப்படும். இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று எளிதில் பரவி விடும். இதனை சுத்தப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நகராட்சி அதிகாரிகள் எவ்வளவு சுத்தம் செய்தாலும் அங்கு குப்பைகள் சேர்வது மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. இதுகுறித்து சிஎம்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பது ஊழியர்களுக்கு ஒரு கடினமான பணியாகிட்டது. பொதுமக்களிடம் இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் மேலும் மேலும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொது இடங்களில் குப்பை கொட்டும் பொது இடங்களில் பாம்புகள் உள்ளது ஜாக்கிரதை என்று பலகை வைப்பதால் குறைந்தது 50 சதவீதம் பேராவது கவனிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Related Stories:

>