×

வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையைப் பெற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 30 பேரின் பெயர் பட்டியலையும், அங்கீகாரமற்ற கட்சிகள் 15 பேரின் பெயர் பட்டியலையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதில் இருந்து 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கை வருகிற 12ம் தேதி வெளியிடப்படவுள்ளது. செலவு தொகையில் இருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையம் அல்லது தலைமை தேர்தல் அதிகாரிக்கு வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயண செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திரத் தலைவர் பிரசாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது.

Tags : Star Speakers ,Satya Pradhan Sagu , Star Speakers must submit list by 22nd: Satya Pradhan Sagu orders parties
× RELATED அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள்...