×

12 ஆயிரம் விளம்பரங்கள் அகற்றம் சென்னையில் 196 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி: மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் 12 ஆயிரம் விளம்பரங்கள் அகற்றப்பட்டு உள்ளது. 196 இடங்களில் மட்டும் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்றும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னையில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் பேசியதாவது: அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி இல்லாமல் பேனர் மற்றும் போஸ்டர் அடிக்க கூடாது. சென்னையில் மொத்தம் 12 ஆயிரம் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த பணி தொடரும். சென்னையில் 196 இடங்களில் மட்டும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்சி கூட்டம், தற்காலிக அலுவலகம், வாகனங்கள் மற்றும் ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு suvidha.eci.gov.in என்ற இணையதளம் மூலம் 48 மணி நேரத்திற்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

ெசன்னையில் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் முதியவர்கள் உள்ளனர். 1.10 லட்சம் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் தபால் வாக்கு பதிவு செய்ய மார்ச் 16ம் தேதிக்குள் படிவம் 12 D அளிக்க வேண்டும். தபால் வாக்கு அளிக்கும் முதியோர்,  மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும். வீடு வீடாக செல்லும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் செல்லலாம். இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும். வேட்பாளர்கள் ரூ.30.80 லட்சம் தான் செலவு செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 1800 425 7012 என்ற எண்ணையும், வாக்காளர்கள் சேவைக்கு 1950 என்ற சேவை மையத்தையும் தொடர்பு கொள்ளலாம். தேர்தல் தொடர்பாக இதுவரை 10 புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai ,District Election Officer ,Prakash , Removal of 12 thousand advertisements Permission to hold public meetings in 196 places in Chennai: Interview with District Election Officer Prakash
× RELATED சென்னையில் காவல்துறையினர் தபால்...