கர்நாடக மாநில திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பெங்களூரு: சீர்கெட்டுள்ள தமிழகத்தின் தலையெழுத்தை மு.க.ஸ்டாலின் முதல்வராவதன் மூலம் சீர்ப்படுத்துவார் என்று கர்நாடக மாநில திமுக புகழாரம் சூட்டியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 68வது பிறந்த நாள் விழா கர்நாடக மாநில திமுக சார்பில் பெங்களூரு இராமசந்திரபுரத்தில் உள்ள மாநில தலைமை கழக கட்டிடமான கலைஞரகத்தில் அவைத்தலைவர் மொ.பெரியசாமி தலைமையில் நடந்தது. அண்ணா, கலைஞர் ஆகியோர் சிலைகளுக்கு மாநில பொருளாளர் ேக.தட்சணாமூர்த்தி மாலை அணிவித்தார். மாநில அமைப்பாளர் ந.இராமசாமி, துணை அமைப்பாளர் ஜி.ராமலிங்கம், மாநில இளைஞரணி செயலாளர் டி.சிவமலை, பெங்களூரு 96வது வார்டு துணை செயலாளர் எஸ்.ஏழுமலை ஆகியோர் பிரமாண்ட கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். கழக முன்னோடிகள், வி.எஸ்.மணி, போர்முரசு கதிரவன், ஆற்காடு அன்பழன், மு.நெடுமாறன், இரா.நாம்தேவ், தமிழச்செல்வன், மகளிரணி நிர்வாக சற்குணமதி, திருமலை ஆகியோர் மு.க.ஸ்டாலின் சாதனைகளை விளக்கி பேசினார்கள்.

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக எந்த வளர்ச்சியுமில்லாமல், அனைத்து துறைகளும் சீர்கெட்டுள்ளது. இதை மாற்றும் வாய்ப்பாக வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும். மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் நல்லாட்சி, சீர்கெட்டுள்ள தமிழகத்தை சீர் செய்து உண்மையான சமூகநீதியை நிலைநாட்டும் ஆட்சியாக அமையும் என்று புகழாரம் சூட்டினர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பெங்களூருவில் தயானந்தநகர், சிவன்செட்டிகார்டன், ேக.ஆர்.புரம், நீலசந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் தங்கவயலில் 5வது ஓரியண்டல் வார்டில் ஏபிஎம் சேரன் தலைமையிலும் எட்கர்ஸ் வார்டில் மு.நித்யானந்தம் தலைமையிலும் ஆண்டர்சன்பேடையில் ஆ.கரிகாலன், மதிவாணன் தலைமையிலும் ஷிவமொக்கா, சிக்கமகளூரு, மைசூரு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

Related Stories:

>