“தடுப்பூசி போட்ட வலியே தெரியவில்லை”... புதுச்சேரி செவிலியரை புன்னகையுடன் பாராட்டிய பிரதமர் மோடி...!..

டெல்லி : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மோடிக்கு தடுப்பூசியை செலுத்திய புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். புதுச்சேரி செவிலியர் நிவேதா கூறியதாவது,   புதுச்சேரி  தான் எனது பூர்வீகம். நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். நான் தற்போது தடுப்பூசி பிரிவில் பணியாற்றுகிறேன். பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகிறார் என இன்று காலை தான் எனக்கு தெரியும். ‘பிரதமருக்கு தடுப்பூசி போட வேண்டும்’ என்று சொன்னார்கள்.

பிரதமர் என்னுடன் நன்றாக பேசினார். அவருக்கு பாரத் பயோடெக்கின் தடுப்பூசி போடப்பட்டது. 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும். பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தும்போது அவர் ‘‘ஊசியை செலுத்துங்கள்’’ என்றார். அப்போது ‘‘தடுப்பூசி போட்டப்பட்டு விட்டது’’ என்றேன். அதற்கு அவர் ‘‘அப்படியா, தடுப்பூசி போட்ட வலியே தெரியவில்லையே’’ என்றார். பின்னர் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று பிரதமர் தன்னிடம் கேட்டதாகவும் நிவேதா கூறினார்.

Related Stories:

>