தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி

சென்னை: தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பணியாளர்களுக்கு ஊதியம் தர வேண்டியுள்ளதால் ரூ.15 லட்சம் வரை கொண்டுசெல்ல அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50 ஆயிரம் வரை பணத்தை எடுத்து செல்லலாம் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி தொடர்புடைய அறிவிப்புகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த வெள்ளியன்று வெளியிட்டார். இதில், தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்ட தேர்தல் நடைபெறும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்திற்கான தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>