எங்க டார்கெட் மோடி, அமித்ஷா தான்... அம்பானி இல்ல : ஜெய்ஷ்-உல்-ஹிந்த் தீவிரவாத அமைப்பு பகீரங்க எச்சரிக்கை!

மும்பை: ரிலையன்ஸ் குழு தலைவரான முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட ‘அன்டிலா’ அடுக்குமாடி வீடு மும்பையின் அல்டாமவுன்ட் சாலையில் அமைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்த வீட்டின் அருகே சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் ஒன்று நின்றிருந்தது. போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்துக்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்வதாக நேற்று ஒரு தகவல் பரவியது. அந்த அமைப்பின் டெலிகிராம் கணக்கிலிருந்து வெளியான அத்தகவலில், இது வெறும் டிரெய்லர் தான்; மெயின் பிக்சர் இனிமே தான் ஆரம்பமாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தாக்குதல் நடத்த வேண்டாம் என்றால் கிரிப்டோகரன்சியில் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இச்சூழலில் நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என ஜெய்ஷ்-உல்-ஹிந்த் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுகுறித்து ஜெய்ஷ்-உல்-ஹிந்த் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலையில் தான் செய்தித்தாள்களைப் பார்த்து இவ்விஷயத்தைத் தெரிந்துகொண்டு அதிர்ந்துபோனோம். தேவையில்லாமல் மார்ஃபிங் செய்து நாங்கள் பொறுப்பேற்றுக்கொண்டதாக தகவல் வெளியிட்ட இந்தியாவின் உளவுத்துறைக்கு எங்களது கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். இந்தியாவிலுள்ள தொழிலதிபதிர்கள் எங்களின் குறி அல்ல. எங்களுடைய டார்கெட் எப்போதும் பாசிசத்தை வளர்த்தெடுக்கும் மோடியும் பாஜகவும் தான்.இந்தியாவிலிருக்கும் அப்பாவி இஸ்லாமியர்களுக்கு எதிரான மோடியின்செயல்பாடுகளுக்கு எதிராகவே எங்களின் போராட்டம் அமையும். நாங்கள் பணத்திற்காகப் போராடவில்லை. ஷரியாவுக்காகப் போராடுகிறோம். நாங்கள் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்காகப் போராடுகிறோம். அம்பானிகளுக்கு எதிராக அல்ல” என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.

Related Stories:

More
>