×

'ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு'... திமுக தேர்தல் பிரசார பாடல் வீடியோ வெளியீடு!!

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு தேர்தல் பரப்புரைப் பாடலின் காணொலியைக் கழகப் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்கள் வெளியிட்டார். கழகத் தலைவர் அவர்களது தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது இந்தப் பாடலின் ஆடியோ வெளியானபோதே, தமிழக மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தது.

தமிழகத்தின் அவலநிலை மாறி, மீண்டும் வளர்ச்சியை நோக்கிச் செல்ல தி.மு.கழகமும், கழகத் தலைவர் அவர்களும் ஆட்சிப் பொறுப்பில் அமர்வதே ஒரே தீர்வு என எடுத்துரைப்பதாக இப்பாடலின் வரிகள் அமைந்துள்ளன.நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் பேராதரவோடு, பெருவெற்றி பெற்று, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழக மக்கள் புதிய விடியலைக் காண்பார்கள் என்ற உறுதியை இப்பாடல் மக்களுக்கு அளிக்கிறது.

Tags : Stalin ,Ditham , மு.க.ஸ்டாலின்
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...