சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சி போட்டியிட உள்ளன. இந்நிலையில், நேற்று மநீம கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கமல்ஹாசன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் அவர் போட்டியிட இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.