×

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக மற்றும் வன்னிய சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுடன்தான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடுக்கு பதிலாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7%, இதர பிரிவினருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா, கடந்த 26ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த 26ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Tags : Governor ,Vannians , 10.5% quota for Vanni Governor approves the bill
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...