மர்ம கும்பல் சுட்டுக்கொலை மெக்சிகோவில் ரோட்டில் வீசப்பட்ட 10 சடலங்கள்

ஜலிஸ்கோ: மெக்சிகோவில் நடந்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஒரு பெண், 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  மெக்சிகோவில் சட்ட விரோத நடவடிக்கைகள் அதிகம் நடக்கும் இடமாக ஜலிஸ்கோ மாகாணம் உள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில், இந்த மாகாணத்தின் தலைநகரான குவாடலஜராவின் புறநகர்ப் பகுதியில் 18 பிளாஸ்டிக் பைகளில் மனித உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதேபோல், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரே இடத்தில் 113 சடலங்கள் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்தாண்டு மட்டும் இதுேபால் 189 சடலங்களை அரசு கண்டறிந்தது.

்இந்நிலையில், போலீசார் நேற்று ரோந்து சென்றபோது ஒரு வீட்டின் அருகே 10 பேரின் சடலங்களைக் கண்டுபிடித்தனர். அங்கே ஒரு பெண்ணுடன், இரு சிறுவர்கள் காயமடைந்த நிலையிலும் மீட்கப்பட்டனர். போலீசாரின் விசாரணையில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்ட்டல் என்ற தீவிரவாதிகள் குழு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: