மதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு

சென்னை : தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை: 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மதிமுக சார்பில், மல்லை சத்யா (துணைப் பொதுச்செயலாளர்), செந்திலதிபன் (ஆய்வு மையச் செயலாளர்), வழக்கறிஞர் சின்னப்பா (உயர்நிலைக்குழு உறுப்பினர்), ஆவடி அந்திரிதாஸ் (தேர்தல் பணிச் செயலாளர்) ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்படுகின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories:

>