வந்தவாசியில் வலம் வரும் வாட்ஸ் அப் முழக்கம் என் ஓட்டு என் தொகுதி வேட்பாளருக்கு..

தீபம் மாவட்டத்தில் வந்தவாசி தொகுதியில் கடந்த 3 நாட்களாக வாட்ஸ் அப்பில் வைரலாகி வரும் வார்த்தை  ‘‘என் ஓட்டு என் தொகுதியை சார்ந்த வேட்பாளருக்கு மட்டுமே’’ என்பதுதான். ‘‘எங்கள் தொகுதி எங்களுக்கே’’ என ஆரம்பிக்கும் அந்த வாசகம்  ‘‘என் ஓட்டு என் தொகுதியை சேர்ந்த வேட்பாளருக்கு மட்டுமே, வந்தவாசி தொகுதி வாக்காளர்கள்’’ என்று முடிகிறது. வந்தவாசி பகுதியில் வாட்ஸ் அப் குழுக்களில் இது வேகமாக பரவி வருகிறது. வந்தவாசி தொகுதியில் அதிமுக சார்பில் வேறு தொகுதியை சேர்ந்த வேட்பாளரோ, கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில் பாமகவில் வேறு தொகுதியை சேர்ந்தவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் வேட்பாளரை மட்டுமே நிறுத்த வேண்டும் என்பதற்காகதான் இந்த வாட்ஸ்அப் பதிவு வைரலாகி வருகிறதாம்.

Related Stories:

>