×

சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு

சென்னை: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்க்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் அமேசோனியா - 1 செயற்கைக் கோள் ஏவப்பட்டது.

தற்போது பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்களும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அனைத்து செயற்கைக் கோள்களும் சூரிய ஒத்திசைவு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இந்நிலையில் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Tags : Satish Dhawan Space Center ,Deputy ,Chief Minister , PSLV C-51 Rocket: Deputy Chief Minister praises OBS
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...