வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு இனிப்பு வழங்கி கொண்டாடுவோம்: ராமதாஸ் கடிதம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு  எழுதிய  கடிதத்தில் கூறியிருப்பதாவது:   வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மக்கள் தொகைக்கு இணையான இடப்பங்கீடு  என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முதற்கட்டமாக 10.50% இடப்பங்கீட்டை வென்றெடுத்துள்ளோம்.  வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீயும் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பதை அறிகிறேன். வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் வீடு  வீடாக செல்லுங்கள். நாம் வென்றெடுத்துள்ள சமூகநீதி சாதனைகளை எடுத்துக் கூறி, அதன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் வீட்டில் உள்ளவர்களுக்கு இனிப்பு வழங்குங்கள்.

Related Stories:

More
>