வன்னியர் இடஒதுக்கீட்டில் எதற்காக இந்த அவசர கோலம்? டிடிவி.தினகரன் கேள்வி

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால்,  அவசரகதியில் வன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது  தேர்தலுக்காகதான். 109 சமூகங்களை உள்ளடக்கிய எம்பிசி பிரிவில் எந்த சமூகமும் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டினை முறையாக வழங்குவதுதான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும்.  வன்னியர் உள் ஒதுக்கீட்டினை ஆய்வு  செய்ய இந்த அரசாங்கம் அமைத்த நீதிபதி குலசேகரன் கமிட்டி என்ன ஆனது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>