×

காசாகிராண்ட் அறிமுகப்படுத்தும் பிரிட்டிஷ் ஸ்டைல் வில்லா

சென்னை: சென்னையில் முதல் பிரிட்டிஷ் ஸ்டைல் வில்லா திட்டமான காசாகிராண்ட் விஸ்டாஸ் எனும் சொகுசு வில்லாக்கள் அடங்கிய குடியிருப்பு திட்டத்தை பெருங்களத்தூரில் காசாகிராண்ட் அறிவித்துள்ளது. 4.7 ஏக்கர் பரப்பில், 101 ப்ரீமியம் சொகுசு வில்லாக்களுடன், 35க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த லைப் ஸ்டைல் அம்சங்கள் மற்றும் வசதிகளை இது கொண்டிருக்கும். இதன் ஆரம்ப விலை ₹72 லட்சம். தரைதளம் மற்றும் ஒரு மேல்தளம் என்ற கட்டமைப்பில், திறந்தநிலை மொட்டை மாடியுடன் கட்டப்படுகிறது. 20,000 சதுர அடி பசுமையான பரப்பளவு, 65 % திறந்தவெளியுடன் அமைகிறது.

கிளப் விக்டோரியா என்ற பெயரில் 4500 சதுர அடி பரப்பளவில் கிளப்ஹவுஸ் இங்கு அமைகிறது. 9 மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். காசாகிராண்ட் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஈஸ்வர் கூறுகையில், ‘‘பட்ஜெட் காரணத்தால் எல்லோராலும் வில்லா வாங்க முடிவதில்லை. எனவே, ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் விலையில் வில்லாவை வழங்குகிறோம். மேலும் விவரங்களை www.cosagrand.co.in இணையதளத்தில் பார்வையிடலாம்,’’ என்றார்.


Tags : Cossack , British style villa introduced by Cossack
× RELATED மணப்பாக்கத்தில் 10.19 ஏக்கர் பரப்பில்...