அடிலெய்டு மகளிர் டென்னிஸ் போலாந்தின் இகா சாம்பியன்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடந்த ‘அடிலெய்டு சர்வதேச  மகளிர் டென்னிஸ்’ போட்டியில் போலாத்தின் இகா ஸ்டிவெய்க் சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் ‘சர்வதேச மகளிர் டென்னிஸ்’ போட்டி பிப்.22ம் தேதி தொடங்கியது. இதன் ஒற்றையர் பிரிவில்  உலகின் முதல் நிலை வீராங்கனை ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா), பெலிண்டா பென்சிக்(ஸ்விட்சர்லாந்து, 12வது ரேங்க்), ஜோன்னா கொன்டா(இங்கிலாந்து, 15வது ரேங்க்), இகா ஸ்வெய்டக்(போலாந்து, 17வது ரேங்க்) என  முன்னனி வீராங்கனைகள் பங்கேற்றனர். முதல் அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேன்(23) உடன் மோதிய  இகா(19) 2-0 என்ற நேர் செட்டில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அதேபோல் 2வது அரையிறுதியில் அமெரிக்காவின் கோரி காஃப்(16) உடன் விளையாடிய பெலிண்டா(23)  2-1 என்ற கணக்கில் போராடி  வென்று  இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இவர்கள் இருவரும் மோதிய இறுதிப்போட்டி நேற்று நடந்தது. ஆரம்பம் முதலே இகா அதிரடியாக விளையாடினார். அதனால் பெலிண்டா புள்ளிகளை எடுக்க முடியாமல் திணறினார். அதனை பயன்படுத்திய இகா 6-2, 6-2 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றினார். அதனால் 2-0 என்ற நேர் செட்களில் பெலினண்டாவை வீழ்த்தி இகா சாம்பியன் பட்டம் வென்றார். இகா வெல்லும் 2வது சர்வதேச பட்டம் இது. ஏற்கனவே 2020ம் ஆண்டு பிரஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டத்தை இகா ஸ்வெய்டக் வென்றுள்ளார்.

Related Stories: