×

கூட்டணி பேச்சு முடிவடையாத நிலையில் ராஜபாளையம் தொகுதி பாஜ வேட்பாளர் கவுதமி: மேலிட பொறுப்பாளர் அறிவிப்பு அதிமுகவினர் கடும் அதிர்ச்சி

ராஜபாளையம்:   விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பாஜ சட்டமன்ற தொகுதி மேலிடத் தேர்தல் இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அவரை சட்டமன்ற பொறுப்பாளரான நடிகை கவுதமி வரவேற்றார். கூட்டத்தில் சுதாகர் ரெட்டி பேசுகையில், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் நடிகை கவுதமியை வெற்றி பெறச் செய்ய அனைவரும் பாடுபட வேண்டும்’’ என்றார்.
பின் செய்தியாளர்களிடம் சுதாகர் ரெட்டி கூறுகையில், பாஜ சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். கூட்டணி கட்சிகளுடன் முறையான விதிமுறைகளை அனுசரித்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவோம். இறுதி முடிவு எந்த நிலைப்பாடாக வேண்டுமானாலும் இருக்கலாம்’’ என்றார். அதிமுக, பாஜவிற்கு இடையே தொகுதி உடன்பாடு நிறைவடையாத நிலையில், ராஜபாளையத்தில் வேட்பாளரை பாஜ தன்னிச்சையாக அறிவித்துள்ளது அதிமுகவினரிடைய சலசலப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.



Tags : Raja ,baja ,Gavatami , Rajapalayam constituency BJP candidate Gautami: Coalition announcement shocks AIADMK
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!