×

தமிழ்நாடு-புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் திமுக வேட்பாளர் நேர்காணல் நாளை மறுநாள் தொடக்கம்: சென்னை மாவட்டத்துக்கு 6ம் தேதி நடக்கிறது பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்தவர்களிடம் நாளை மறுநாள் முதல் நேர்காணல் நடக்கிறது. சென்னை மாவட்டத்துக்கு வருகிற 6ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த 17ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு வழங்க தொடங்கிய நாள் முதல் தினமும் ஏராளமானோர் போட்டிப்போட்டு கொண்டு விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றனர். குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போட்டிப் போட்டு விருப்ப மனு வாங்கிச் சென்றனர். நேற்று வரை சுமார் 8 ஆயிரம் பேர் வரை விருப்ப மனுக்களை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. விருப்ப மனுக்களை அளிக்க இன்று கடைசி நாள். இந்நிலையில் நேர்காணல் நடைபெறும் தேதியை திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு-புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி  விண்ணப்பம் செலுத்தியவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 2ம் தேதி  முதல் 6ம் தேதி வரை, மாவட்ட வாரியாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம்- வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார். குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்/ பொறுப்பாளர்கள் மட்டும் வரவேண்டும். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் வரவேண்டிய அவசியமில்லை. வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ-பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது. அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது.மார்ச் 2ம் தேதி (செவ்வாய்கிழமை): காலை 8 மணி கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்திய, தென்காசி வடக்கு, தெற்கு ராமநாதபுரம்.

மாலை 4 மணி விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறும்.மார்ச் 3ம் தேதி: காலை 9 மணி மதுரை வடக்கு, தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, தெற்கு, நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு, திருப்பூர் மத்திய, வடக்கு. மாலை 4 மணி திருப்பூர் கிழக்கு, தெற்கு, கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு, கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்டங்கள். மார்ச் 4ம் தேதி: காலை 9 மணி தர்மபுரி கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு, மேற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய புதுக்கோட்டை வடக்கு, தெற்கு. மாலை 4 மணி கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு, திருவாரூர், நாகை வடக்கு, தெற்கு மாவட்டங்கள்.

மார்ச் 5ம் தேதி: காலை 9 மணி தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, கடலூர் கிழக்கு, மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு, விழுப்புரம் வடக்கு, மத்தி. மாலை 4 மணி திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு. மார்ச் 6ம் தேதி காலை 9 மணி திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு, சென்னை வடக்கு, வடகிழக்கு, சென்னை கிழக்கு, தெற்கு, சென்னை மேற்கு, தென்மேற்கு மாவட்டங்கள். மாலை 4 மணி புதுச்சேரி, காரைக்காலுக்கும் நேர்காணல் நடைபெறும்.

Tags : Duraimurugan ,Chennai District 6th , Tamil Nadu-Puducherry Assembly Election DMK Candidate Interview Starts Tomorrow: Chennai District General Secretary Thuraimurugan's Announcement
× RELATED திமுக என்பது கொள்கை கூடாரம் அதை...