அதிமுக கூட்டணி பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு; தொகுதி குறைந்து பெற்றிருந்தாலும் பாமகவின் பலம் குறையாது: அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை: அதிமுக - பாமக இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, ஒப்பந்தம் படி பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என பேச்சுவார்த்தைக்கு பிறகு பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். இந்த கூட்டணியானது நிச்சியமாக மகத்தான வெற்றி பெறும் என கூறினார். இந்த தேர்தலில் வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தோம். எனவே அரசு அதை நிறைவேற்றியுள்ளது. 40 ஆண்டுகால போராட்டத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது என கூறினார்.

எனவே நாங்கள் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை குறைத்து பெற்றுள்ளோம். மேலும் எந்தெந்த தொகுதிகளில் நாங்கள் போட்டியிட உள்ளோம் என்பது பற்றி ஆலோசனை நடத்தி பின்னர் அறிக்கப்படும். தொகுதி குறைந்து பெற்றிருந்தாலும் பாமகவின் பலம் குறையாது என கூறினார். மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார் என பேட்டியளித்தார். கூட்டணிகட்சிகள் வெற்றி பெற நாங்கள் உறுதுணையாக இருப்போம் என கூறினார்.

Related Stories:

More
>