×

அசுர வேகத்தில் திமுக.. மார்ச் 2ம் தேதி முதல் திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடக்கம் என தலைமைக் கழக அறிவிப்பு

சென்னை : மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் செலுத்தியவர்களை கழகத் தலைவர் அவர்கள் 2-3-2021 முதல் 6-3-2021ம் தேதி வரை, பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்கள்.

குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்/
பொறுப்பாளர்கள் மட்டும் வரவேண்டும். மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள்வரவேண்டிய அவசியமில்லை. வேட்பாளர்கள் தங்களுக்கானஆதரவாளர்களையோ - பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் - 2021


மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெறும் நாள் விவரம்

மார்ச் 2 செவ்வாய் காலை 8.00 மணி கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு,
திருநெல்வேலி கிழக்கு, மத்திய,தென்காசி வடக்கு, தெற்கு இராமநாதபுரம்

’’ ’’ ’’ மாலை 4.00 மணி விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு திண்டுக்கல் கிழக்கு, மேற்கு

மார்ச் 3 புதன் காலை 9.00 மணி மதுரை வடக்கு, தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, தெற்கு நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு திருப்பூர் மத்திய, வடக்கு

’’ ’’ ’’ மாலை 4.00 மணி திருப்பூர் கிழக்கு, தெற்கு கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு

மார்ச் 4 வியாழன் காலை 9.00 மணி தருமபுரி கிழக்கு, மேற்கு நாமக்கல் கிழக்கு, மேற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய புதுக்கோட்டை வடக்கு, தெற்கு

’’ ’’ ’’ மாலை 4.00 மணி கரூர், அரியலூர், பெரம்பலூர்திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு,திருவாரூர், நாகை வடக்கு,தெற்கு

மார்ச் 5 வெள்ளி காலை 9.00 மணி தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, கடலூர் கிழக்கு, மேற்கு
கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு விழுப்புரம் வடக்கு, மத்திய

’’ ’’ ’’ மாலை 4.00 மணி திருவண்ணாமலை வடக்கு, தெற்கு,வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய
காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு

மார்ச் 6 சனி காலை 9.00 மணி திருவள்ளூர் கிழக்கு,மத்திய,மேற்கு சென்னை வடக்கு, வடகிழக்கு
சென்னை கிழக்கு, தெற்கு சென்னை மேற்கு, தென்மேற்கு

’ ’’ ’’ மாலை 4.00 மணி புதுச்சேரி, காரைக்கால்

அண்ணா அறிவாலயம் துரைமுருகன்,
சென்னை - 18. பொதுச்செயலாளர்,
நாள் : 27-2-2021. தி.மு.க.

Tags : Leadership Corporation , திமுக வேட்பாளர்கள்
× RELATED ஜூன் 14-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில்...