படப்பை அருகே கரசங்காலில் இன்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அறிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ  வெளியிட்டுள்ள அறிக்கை. உங்கள் பிரச்னைகள் தீர்ப்பதே எனது முதல் பணி, எனது அரசின் முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும், என்ற முழக்கத்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (பிப்.27) காலை படப்பை அருகே கரசங்கால், துண்டல் கழனி, அண்ணா திடலில், பொதுமக்களிடம் குறைகள் கேட்டு, அவர்களது கோரிக்கைகளை மனுவாக பெறுவதற்காக வருகிறார். நிகழ்ச்சியில் காஞ்சி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலந்தூர்,  பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி - ஒன்றிய - நகர - பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு அரசின் மூலம் தீர்வுக் காணக்கூடிய பிரச்னைகளான சான்றிதழ்கள், பட்டா, ஓய்வூதியம், முதியோர் உதவித் தொகை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை தந்து பெருந்திரளாக பொதுமக்கள் கலந்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: