பொதுக்குழு, திமுக மாநில மாநாடு ஒத்திவைப்பு: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நடைபெற இருந்த திமுக பொதுக்குழு மற்றும் திருச்சியில் நடைபெற இருந்த மாநில மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:தலைமை தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், வருகிற மார்ச் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டமும், மார்ச் 14ம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த திமுக மாநில மாநாடும் ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories:

>