×

மாவட்ட கோர்ட் அனைத்திலும் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு: பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவு

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியாற்ற வேண்டியது அரசு ஊழியர்களின் கடமை. ஆனால், ெபரும்பாலான அரசு ஊழியர்கள் நேரத்தை முறையாக பின்பற்றுவதில்லை.  பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை தமிழக அரசின் பெரும்பாலான அரசுத்துறைகளில் பின்பற்றப்படவில்லை. அரசு ஊழியர்களின் முறையான வருகையை உறுதிப்படுத்திடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் தமிழகத்தில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறையில் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை பின்பற்றப்படுகிறது. மற்ற அரசுத்துறைகளில் படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அரசின் மற்ற துறைகளில் பயோ-மெட்ரிக் முறையை அமல்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் தரப்பில் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல் சென்ைன ஐகோர்ட் மற்றும் மதுரை கிளையில் பயோ-மெட்ரிக் முறை பின்பற்றப்படுகிறது. இதைப் போல அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பயோ-மெட்ரிக் முறையை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை பதிவாளர் ஜெனரல் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Courts ,Registrar General , Bio-metric attendance record in all District Courts: Order to the Registrar General
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...