×

வன்னியர் சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு 40 ஆண்டு கால போராட்டம் வெற்றி: முதல்வருக்கு அன்புமணி நன்றி

சென்னை: வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது 40 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என பாமக இளைஞரனி தலைவர் அன்புமணி கூறினார். பாமக இளைஞரனி தலைவர் அன்புமணி நேற்று கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகிறார். தமிழகத்தில் பெரும்பான்மையான சமுதாயமாக வன்னியர் சமுதாயம் உள்ளது. அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர். அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால்தான் முன்னேற முடியும் என்ற நிலையில் உள்ளனர். 1987ம் ஆண்டு ராமதாஸ் நடத்திய போராட்டத்தில் இடஒதுக்கீடுக்காக சுமார் 21 தியாகிகள் உயிர் இழந்துள்ளனர். அன்றைய காலகட்டத்தில் 108 சமுதாயத்திற்கு சேர்த்து 20 சதவீதம் வழங்கப்பட்டது.

இதில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 3 முதல் 4% மட்டுமே இடஒதுக்கீடு கிடைத்தது. ராமதாஸ் 6 கட்ட போராட்டம் நடத்தியுள்ளார். 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் இன்று (நேற்று) வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 %இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Reservation for the Vanniyar Community 40 Years of Struggle Success: Dear Chief Minister
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...