காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை :புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி : காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி நேற்று புதுச்சேரியில் பேசியதாவது, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கட்சித் தலைவரின் காலணியைத் தூக்குவதில் அக்கறை காட்டுவார். புதுவையில் காங்கிரஸ் அரசு அனைத்துத் துறைகளையும் சசீரழித்துவிட்டது. மக்களுக்கு வேலை செய்ய காங்கிரஸுக்கு விருப்பமில்லை. காங்கிரஸ் அரசு மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்த ஒத்துழைக்கவில்லை.

காங்கிரஸ் அடுத்தவர்களை ஜனநாயக விரோதிகள் என அழைக்கத் தவறியதில்லை. அவர்களின் செயல்பாட்டை முதலில் கண்ணாடியில் பார்க்க சில சமயம் காங்கிரஸார் மாநிலங்களுக்கு இடையில் பிரச்சினைகளை எழுப்புவார்கள். மக்களைப் பிரித்து எதிரிகளாக்கி அரசியல் செய்வார்கள். பொய் சொல்வதில் அனைத்துப் பதக்கமும் பெறத் தகுதியானவர்கள் காங்கிரஸ் தலைவர்கள். காங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்,” என்றார்

இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, ” புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசை விமர்சிக்க பிரதமர் மோடிக்கு என்ன தகுதி உள்ளது? காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை. பிரதமர் தொடங்கி வைத்த நெடுஞ்சாலைத் திட்டம் 2014 இல் காங்கிரஸ் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது . பல ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஏமாற்றுகிறார் ” என்றார்.

Related Stories: