தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய பொதுவாழ்வுக்கே மிகப்பெரிய இழப்பு!: வைகோ இரங்கல்

சென்னை: தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய பொதுவாழ்வுக்கே மிகப்பெரிய இழப்பு என தா.பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தலைவராக தா.பாண்டியன் திகழ்ந்தார். பாரதியும் சாதியும், பொருளாதார நெருக்கடியும் தீர்வுகளும் உள்ளிட்ட பல நூல்களை தா.பாண்டியன் எழுதியுள்ளார் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்.

Related Stories:

>